2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஊரடங்கு நேரத்தில் சீட்டு விளையாடியோருக்கு பொலிஸார் எச்சரிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 14 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எச்.எம்.எம்.பர்ஸான்

கொவிட்-19  காரணமாக பொதுமக்களின் பாதுகாப்புக்காக, ஊரடங்குச் சட்டம் 

பிறப்பிக்கப்பட்டுள்ள வேளை யில் பொதுமக்கள் வெளியில் செல்வதையும், ஒன்று கூடுவதையும் தவிர்க்கும் படி பொலிஸார் தொடர்ச்சி யாக அறிவுறுத்தி

வருகின்றனர். அந்தவகையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸார் பகல் மற்றும் இரவு வேளைகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பொலிஸ் பிரிவில் நேற்றிரவு சீட்டு விளையாட்டில் ஈடுபட்ட குழுவினரை மடக்கிப் பிடித்த பொலிஸார் அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இனிவரும் காலங்களில் இவ்வாறான விளையா ட்டுக்களில் ஈடுபட்டால் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X