Princiya Dixci / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு நகர் பகுதியிலுள் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியில் கடமையாற்றும் ஆரையம்பதியைச் சேர்ந்த பெண்ணொருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக் கண்டறியப்பட்டதையடுத்து, குறித்த பல்பொருள் அங்காடி இன்று (28) பூட்டப்பட்டதுடன், அங்கு கடமையாற்றிய 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்தப் பல்பொருள் அங்காடிக்கு பொருட்களை கொள்வனவு செய்ய சென்று வந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் மயூரன் தெரிவித்தார்.
ஆரையம்பதியில் நேற்று எழுமாறா முறையில் செய்யப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த பல்பொருள் அங்காடியில் கடமையாற்றும் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது.
6 hours ago
8 hours ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago
02 May 2026