Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 ஜனவரி 28 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கு நீதி கோரி மட்டக்களப்பில், நாளை (29) கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் ஊடகத்துறை தொழில்சார் ஊடகவியலாளர் சம்மேளனம் போன்ற ஊடக அமைப்புக்களின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு - காந்திபூங்கா முன்றலில் நாளைக் காலை 09 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, தமது கண்டனத்தை தெரிவிப்பதோடு, முறையான விசாரணை நடத்தி, நீதி கிடைப்பதற்கு பொறுப்பு வாய்ந்தவர்களை வலியுறுத்துவதே இதன் நோக்கமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
50 minute ago
53 minute ago
2 hours ago