Freelancer / 2022 ஜூன் 26 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எச்.எம்.எம்.பர்ஸான்)
பொதுமக்கள் சமயல் எரிவாயு மற்றும் எரிபொருட்களை பெற்றுக்கொள்ள தொடர்ந்தும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்களும் நாளுக்கு நாள் வீதியோரங்களில் எரிவாயுக்காக காத்துக் கிடந்து ஏமாற்றத்துடன் வீடுகளுக்குச் செல்கின்றனர்.
இவ்வாறான நிலைமையினைக் கருத்திற்கொண்டு பொதுமக்களின் நலன் கருதி ஓட்டமாவடி பிரதேச செயலகம் எரிவாயு சிலின்டர்களை பெற்றுக்கொள்ள குடும்ப விநியோக அட்டை ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
கிராம உத்தியோகத்தர் ஊடாக வாக்காளர் இடாப்பின் படி, குடும்பத் தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் இந்த அட்டையினை பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் பூர்த்தி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

8 minute ago
17 minute ago
44 minute ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
44 minute ago
20 Dec 2025