2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஏணியில் ஏறியவர் விழுந்து மரணம்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 23 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, புதிய காத்தான்குடிப் பிரதேசத்தில் நேற்றுப் புதன்கிழமை ஏணியில் ஏறிய அப்பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதியான 04 பிள்ளைகளின் தந்தையான ஆதம்பாவா முஹம்மது ஹனீபா (வயது 47) என்ற குடும்பஸ்தர்  உயிரிழந்துள்ளார்.  

இவர் தனது வீட்டிலுள்ள செயலிழந்த மின்குமிழை அகற்றி புதிய மின்குமிழைப் பொருத்துவதற்காக ஏணியில் ஏறியபோது இவர் சறுக்கி கீழே விழுந்துள்ளார்.

இவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X