2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஏத்துக்காலில் பிறிதொரு பகுதியில் கடலரிப்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி, ஏத்துக்கால் கடற்கரையின் மற்றுமொரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (25) மாலை தொடக்கம் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் சுமார் 06 அடி தூரம் கடலுக்குள் சென்றுள்ளதாக கரையோரம் பேணல் மற்றும் கரையோர முகாமைத்துவத் திணைக்களத்தின் காத்தான்குடி அதிகாரி ஜே.மெக்கில் தெரிவித்தார்.

ஏற்கனவே ஏத்துக்கால் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டபோது, சுமார் 31 அடி தூரம் கடலுக்குள் சென்றிருந்தது. அதற்கு மண்மூடைகள் போடப்பட்டு கடல் அரிப்பு தடுக்கப்பட்டது.

தற்போது ஏற்பட்டுள்ள கடல் அரிப்பைத் தடுப்பதற்கு மண்மூடைகள் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காத்தான்குடி பிரதேச செயலாளர், கரையோரம் பேணல் மற்றும் கரையோர முகாமைத்துவ திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி மற்றும் அதன் உயர் அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X