2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஏப்ரல் தாக்குதல்; இருவருக்குப் பிணை

Editorial   / 2020 ஜனவரி 01 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட  63 பேர், மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றில்  நேற்று  (31) ஆஜர்படுத்தப்பட்டனர்.  

இவர்களுள் 61 பேரை தொடர்ந்து ஜனவரி மாதம் 14ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு,  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய, இருவருக்கு, மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டது.

அதேவேளை, ஒருவரது வழக்கு, மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .