Editorial / 2020 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் நகர பிரதேச செயலாளராக நிஹாறா மௌஜுத் நியமிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமைந்த இந்த நியமனத்தினடிப்படையில், அவர் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் தனது கடமையை, வெள்ளிக்கிழமை (21) பொறுப்பேற்றுள்ளார்.
இவர், மட்டக்களப்பு – கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளராக 13 வருடங்களும், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளராக 3 வருடங்களும் கடமையாற்றியுள்ளார்.
இதேவேளை, ஏறாவூர் நகர சபை மாதாந்த அமர்வின் அடிப்படையில், ஓகஸ்ட் மாதத்துக்கான அமர்வு, நகர சபையின் கேட்போர் கூடத்தில் இன்று (25) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக, அந்நகர சபையின் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித் தெரிவித்தார்.
நகர அபிவிருத்தியோடு சம்பந்தப்பட்ட பல்வேறு விடயங்கள் இந்த மாதாந்த சபை அமர்வில் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எட்டப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
26 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
32 minute ago
2 hours ago