Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மே 22 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்கு உட்பட்ட ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள றகுமானிய்யா வித்தியாலய அதிபரை இடமாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை மற்றும் இந்த வித்தியாலயம் தொடர்பாக அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் பரப்படும் பொய்யான கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்தும் இவ்வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் நேற்று முதல் சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வித்தியாலயத்தின்; அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதற்கும் அவரை தேவையற்ற வகையில் சமூக வளைத்தளங்களில் சிலர் விமர்சித்து வருவதற்கும் கண்டனம் தெரிவித்து தாம் சுகவீன விடுமுறைப் போhராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மேற்படி வித்தியாலய ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்வித்தியாலயத்தில் சுமார் 56 ஆசிரியர்கள் கடiமாற்றி வரும் நிலையில், அவர்களின் சுகவீன விடுமுறை தொடர்பில் அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் இந்த சுகவீன விடுமுறை தொடர்பில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்கு அதிபர் அறிவித்துள்ளார் எனவும் அவர் கூறினார்.
இவ்வித்தியாலய அதிபர் தனது கடமையை சிறந்த முறையில் செய்து, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வரும் இந்த அதிபரை இடமாற்றுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவ்வித்தியாலயத்தின் ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோரும் கூறினர்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago