Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2022 பெப்ரவரி 17 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் என அனைவரும் ஒன்றுபட்டு, இந்த நாட்டில் அரசியல் செய்யக் கூடிய ஒரேயொரு கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியே உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரன்ஜித் மதும பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர்களை, மட்டக்களப்பு - காத்தான்குடியில் வைத்து நேற்று (16) மாலை சந்தித்தது.
இதன்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில், அனைத்து மக்களையும் இனவாதமற்று அரவணைத்து செல்லக் கூடிய ஒரு கட்சியாக எமது கட்சி உள்ளது.
“இன முரண்பாடுகளற்ற ஒரு தலைவராக சஜித் பிரேமதாஸவை காணக் கூடியதாக இருக்கின்றது. தெற்கில் எவ்வாறு அவர் வேலை செய்கிறாரோ அவ்வாறே வடக்கு, கிழக்கிலும் அவர் வேலை செய்கின்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் அனைவரும் இணையும் போதுதான் இந்த நாட்டிலுள்ள பொருளாதாரப் பிரச்சினை உட்பட அனைத்துப் பிரச்சினைளுக்கும் தீர்வு காணமுடியும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago