2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஐஸ், கஞ்சாவுடன் இருவர் கைது

Freelancer   / 2023 மார்ச் 03 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவுடன் இருவரை, நேற்றிரவு (2) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் மாவட்ட புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், காத்தாகன்குடி பெரும் குற்றத்தடுப்பு பிரிவுப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர், நேற்றிரவு காத்தான்குடி - கர்ப்பலா பிரதேசத்தில் வைத்து 45 வயதுடைய ஒருவரை 60 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்தனர்

இதேவேளை, மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் 42 வயதுடைய ஒருவரை 2.60 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.  (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X