2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஐஸ் விழுங்கியவர் கைது: ஒருவர் கைது

Editorial   / 2023 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கனகராசா சரவணன்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு பிரதேசத்தில் ஜஸ் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வியாபாரிகள் இருவரை பொலிஸார்  ஞாயிற்றுக்கிழமை (27) பிற்பகல் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.  

இருவரை கைது செய்யத போதும் அதிலொருவர் ஜஸ் போதைப்பொருளை வாயில் போட்டு விழுங்கிய தையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை (27)  பிற்பகல்  பாலமீன்மடு பிரதேசத்தில் வீதியில் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன் போது வியாபாரத்துக்காக ஜஸ் போதை பொருளை எடுத்து வந்த 31 வயது மற்றும் 19 வயதுடைய இருவரை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.  10 மில்லி கிராம், 15 மில்லிக்கிராம் போதை பொருளையும் கைப்பற்றினர்.

  பொலிஸாரைக் கண்ட  19 வயதுடைய  இளைஞன், ஜஸ்போதை பொருளை வாயில் போட்டு விழுங்கியுள்ளார். இதனையடுத்து  அவரை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய பொலிஸார், அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதில் கைது செய்யப்படட்ட மற்றையவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர்,    நீதிமன்றில் திங்கட்கிழமை (28)  ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .