Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 ஜூலை 29 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில், இதுவரை ஆயிரம் பெண்களை, ஐக்கிய தேசியக் கட்சியின் மகளிர் பிரிவில் இணைத்துக்கொண்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் பிரிவின் தலைவி திருமதி சசிகலா விஜயதேவா தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
“ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்புக் கிளைக்கு, சரியான தலைமைத்துவம் கிடையாது. இதனால், மட்டக்களப்பு மாவட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சி நலிவடைந்து போயுள்ளது.
“எனினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் அமைச்சர் பீல்ட் மாஷல் சரத்பொன்சேகாவினதும் வழிகாட்டலில், புதியவர்கள் அமைப்பாளர்களாகவும் இணைப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் நடவடிக்கைகளை தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கொண்டு செல்கின்றனர்.
“இம்மாவட்டத்தை பொறுத்தவரை, ஆயிரம் பெண்களை, இக்கட்சியின் மகளிர் பிரிவில் அங்கத்தவர்களாக நான் இணைத்துள்ளேன். வாகரையைச் சேர்ந்த 500 பெண்கள், இதில் அங்கத்தவர்களாக இணைந்துள்ளனர்.
“யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், தொழிலின்றி வாழ்வாதாரத்துக்காக கஷ்டப்படும் பெண்களை இனங்கண்டு, அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த, ஐ.தே.க முன்வர வேண்டும்.
“மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் கொழும்பு போன்ற நகரங்களுக்கும் சென்று, வீட்டு பணிப்பெண்களாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பல பெண்கள், கஷ்டத்துக்கு மத்தியில் தொழில் புரிகின்றனர். இவ்வாறான பெண்களுக்கு, தொழில் ரீதியாக வழிகாட்ட வேண்டும் என்பதுடன், அவர்களுக்கான சுய தொழிலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்” என மேலும் தெரிவித்தார்.
42 minute ago
46 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
46 minute ago
6 hours ago