Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி நகர சபைக்கும் துருக்கி பஸ்றா மாநகர சபைக்குமிடையில், காத்தான்குடி அபிவிருத்தி தொடர்பிலான ஒப்பந்தமொன்று, நேற்று (29), துருக்கியில் கைச்சாத்திடப்பட்டது.
இதில், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச். அஸ்பர், துருக்கி பஸ்றா மாநகர மேயர் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர். காத்தான்குடி, நகர சபை துருக்கி பஸ்றா மாநகர சபையுடன் இணைத்து, பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வது தொடர்பிலேயே, இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என, காத்தான்குடி நகர சபை தவிசாளர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான ஏ.எல்.பஹ்மி எம்.ஏ.அமீர் அலி, துருக்கியின் இலங்கை தூதுவர் பி.எம்.அம்ஸா உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .