Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவு நிவாரண விநியோகம், ஒருங்கிணைந்த வகையில் இணைப்பாக்கம் செய்து, விநியோகிகப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முறைகேடுகள், துஷ்பிரயோகங்கள், பாதிக்கப்பட்டோர் புறக்கணிக்கப்பட்டு அநீதிகள் இடம்பெற்று விடக் கூடாது என்பதற்காக, அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு அமைப்புகளினதும், பரோபகாரிகளினதும் உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, நிருவாகக் கட்டமைப்பின் கீழ் உள்வாங்கப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக, அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
அந்த வகையில், முனைப்பு தன்னார்வ உதவு ஊக்க தொண்டு நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 500 குடும்பங்களுக்கு சுமார் 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான உலருணவு நிவாரணத்தை மாவட்டச் செயலகத்தினூடாக வழங்கியதாக, அந்நிறுத்தின் இலங்கைக் கிளைத் தலைவர் எஸ். சசிகுமார் தெரிவித்தார்.
அதேவேளை, தன்னார்வ அமைப்புகளின் இணைந்த நிவாரண விநியோகம், ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் மிச்நகர், மீராகேணி, ஜயங்கேணி ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்ட 62 குடும்பங்களுக்கு, தலா 2,500 பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு, மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார் தலைமையில் ஏறாவூர் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று (28) நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .