2025 மே 08, வியாழக்கிழமை

காதலியை தாக்கிய கான்ஸ்டபிள் கைது

Janu   / 2025 மே 08 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணம் முடிக்கவிருந்த பெண் ஒருவரை தாக்கிய ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை   வியாழக்கிழமை (8) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள், வாழைச்சேனை  பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், அவரை திருமணம் செய்துகொள்ளவிருந்தார். 

இந்நிலையில், விடுமுறையை கழிக்க வீடு திரும்பிய பொலிஸ் கான்ஸ்டபிள் அப்பெண்ணின் வீட்டுக்கு புதன்கிழமை (07)  சென்றுள்ளார்.   அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தையடுத்து பொலிஸ் கான்ஸ்டபிள் பெண்ணை தாக்கியுள்ளார். 

காயமடைந்த பெண் மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, பொலிஸாருக்கு பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ் கான்ஸ்டபிள்  வாழைச்சேனையில் பொலிஸாரால் வியாழக்கிழமை (08)  கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்த வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கனகராசா சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X