Editorial / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
காஷ்மீரில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 08 சிறுமி ஆசிபா கொல்லப்பட்டதைக் கண்டித்து தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (25) ஒலுவில் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜிலிஸ்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஆசிபா கொலைக் குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கு, கயவர்களை கைவிடாதே, நீதியை நிலை நிறுத்து, இது போன்ற ஈனச் செயல் எங்கும் நடக்கக் கூடாது போன்ற சுலோகங்களை ஏந்திய வண்னம் பிரதான நுழைவாயில் வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
கொலை செய்யப்பட்ட ஆசிபாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தாக மாணவர்கள் தெரிவித்தனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago