2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஓட்டமாவடி பிரதேச செயலகம் மின்சாரம் இன்மையால் ஸ்தம்பிதம்

எம்.எம்.அஹமட் அனாம்   / 2017 நவம்பர் 07 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இன்று (07) மின்சாரம் தடைப்பட்டுள்ளமை காரணமாக தங்களுடைய சேவையைப் பெற்றுக் கொள்வதில் அ​சௌசரியத்தை எதிர்நோக்கியதாக, பிரதேச மக்களுக்கு தெரிவித்தனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் மின்சாரம் இல்லாத நேரத்தில் பயன்படுத்துவதற்கு மின்பிறப்பாக்கி இல்லாத காரணத்தால் மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் பிரதேச செயலக அதிகாரிகள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

பிரதேச செயலகத்துக்கு இறப்பு - பிறப்பு பதிவு, வாகன அனுமதிப்பத்திரம், போன்றவற்றைப் பெறுவதற்காக வருகை தந்த மக்கள், மின்சாரம் இன்றியும், மின்பிறப்பாக்கி இல்லாத காரணத்தாலும் தங்களுடைய சேவையைப் பெற்றுக் கொள்ள முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், ஓட்டமாவடி பிரதேச செயலகத்துக்கு மின்பிறப்பாக்கி ஒன்றை வழங்குவதன் மூலம் இப்பிரதேச மக்களின் நேரம், பொருளாதாரத்தை வீணடிக்காமல் சேவையை வழங்க முடியுமெனத் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X