Princiya Dixci / 2021 மே 16 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
இன்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் சவூதிக்கு பணிப்பெண்ணாக சென்ற மட்டக்களப்பு - கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த, கயாத்து முஹம்மது ஆயிஷா பீபி (வயது 46) பெண், வெள்ளிக்கிழமை (14) மரணமடைந்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்துள்ளார் என்று சவூதியில் இருந்து வைத்திய அறிக்கை கிடைக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மரணமடைந்த குறித்த பெண்ணின் ஜனாஸாவை, சவூதி நாட்டில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக குடும்ப உறுப்பினர்கள் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .