Princiya Dixci / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
திருகோணமலையில் இருந்து மட்டக்களப்புக்கு ஓட்டோவில் ஒரு கிலோகிராம் கேரளா கஞ்சா கடத்தி வந்த இருவரை, வாகரையில் வைத்து இன்று (26) கைது செய்துள்ள வாகரை பொலிஸார், ஓட்டோவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
வாகரை பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலையடுத்து, வாகரை பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.என்.திசாநாயக்க ஆலோசனைக்கமைய, பொலிஸ் புலனாய்வுத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போதே, மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை - சீனக்குடா, மட்டிக்கழி பிரதேசத்தைச் சேர்ந்த 26 , 28 வயதுடையவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
06 Mar 2026
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
06 Mar 2026
06 Mar 2026