ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 மார்ச் 08 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை, கோறளங்கேணி, தேவாபுரம் பகுதியில் சுகவீனமடைந்திருந்த 2 வயதுடைய ஆண் குழந்தையொன்று, ஓமத்திராவகம் அருந்திய நிலையில், இன்று (08) உயிரிழந்துள்ளது பற்றிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நவநீதான் றஜிதன் (வயது 2) எனும் குழந்தையே, இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம்பற்றித் தெரியவருவதாவது, மேற்படி குழந்தைக்கு, இரண்டு தினங்களாக சுகவீனமுற்ற நிலையிலிருந்ததாகவும் அதனால் ஓமத்திராவகம் அருந்தக் கொடுத்த நிலையில், அருகிலுள்ள மாடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில், குழந்தை உயிரிழந்து விட்டதாகவும் பொலிஸ் வாக்குமூலத்தில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் சடலம், சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக, மாவடிவெம்பு பிரதேச வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .