Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
கடந்த நவம்பர் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொண்ட சோதனையின்போது, 58 பேரிடமிருந்து 2 இலட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் நீதிமன்றங்கள் மூலமாக அறவிடப்பட்டதாக மாவட்ட மதுவரித் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா, இன்று தெரிவித்தார்.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையை ஒழிக்கும் நடவடிக்கையை மதுவரித் திணைக்களம் மேற்கொண்டது. இந்நிலையில் கேரளா கஞ்சா வெளிநாட்டு மதுபானம், வடிசாராயம், வயது குறைந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்தவர்கள் என 99 பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், 41 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025