2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் மூவர் கைது

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று பேரை புதன்கிழமை (17) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மீராகேணி, முறக்கொட்டாஞ்சேனை, கோரகல்லிமடு ஆகிய கிராமங்களில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அக்கிராமங்களுக்குச் சென்று மேற்படி மூன்று பேரையும் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.  

மீராகேணியிலுள்ள வீதியொன்றில் 66 வயதுடைய ஒருவரிடமிருந்து  8,000 மில்லிகிராம் கஞ்சாவும் முறக்கொட்டாஞ்சேனைக் கிராமத்தில் 62 வயதுடைய ஒருவரிடமிருந்து 3,800 மில்லிகிராம் கஞ்சாவும் கோரகல்லிமடுக் கிராமத்தில் 26 வயதுடைய ஒருவரிடமிருந்து  4810 மில்லிகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்படதாகவும் பொலிஸார் கூறினர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X