2025 மே 12, திங்கட்கிழமை

கடற்கரையில் மோட்டார் சைக்கிள் திருட்டு

Niroshini   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் சவுக்கடி கடற்கரையில் பொழுது போக்குக்காக வந்து மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டு திரும்பிப் பார்த்த 5 நிமிட இடைவெளிக்குள் அந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட சம்பவமொன்று நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு, இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த குகநாதன் ரவிச்சந்திரகுமார் (வயது 29) என்பவருடைய மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான பல்ஸர் ரக மோட்டார் சைக்கிளே திருடப்பட்டுள்ளது.

இவர் தனது நண்பருடன் சவுக்கடிக் கடற்கரைக்கு வந்து மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டு மீண்டும் 5 நிமிட இடைவெளியில் மோட்டார் சைக்கிளைப் பார்த்தபோது அது திருடப்பட்டுள்ளது.

சம்வம் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்த ஏறாவூர் பொலிஸார் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X