2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கடல் அரிப்பினால் அத்திபாரம் சேதம்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி, ஏத்துக்கால் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்புக் காரணமாக மலசலகூடம் அமைப்பதற்காக இடப்பட்டிருந்த அத்திபாரம்  புதன்கிழமை காலை உடைந்துள்ளது.

மீனவர் தங்குமிடக் கட்டடத்துடன் மலசலகூடம் அமைப்பதற்காக இடப்பட்டிருந்த அத்திபாரமே இவ்வாறு உடைந்துள்ளது.
இக்கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்புக் காரணமாக சுமார்; 25 அடி தூரம் கடலுக்குள் சென்றுள்ளதாக காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் தெரிவித்தார்.

கடல் அரிப்பினால் சேதமடைந்துள்ள கட்டடத்தை சென்று பார்வையிட்ட காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர்,  இது தொடர்பில் கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X