Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 07 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில், வீதிகளில் அலைந்து திரிந்த கட்டாக்காலி மாடுகள், மண்முனைப்பற்று பிரதேச சபையால் பிடிக்கப்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை மாலை தொடக்கம் நேற்று (06) மாலை வரையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, 60க்கும் அதிகமான மாடுகள் பிடிக்கப்பட்டனவென, பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம் தெரிவித்தார்.
கட்டாக்காலி மாடுகளால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான விபத்துகள் இடம்பெற்றுவரும் நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென அவர் தெரிவித்தார்.
பண்ணையாளர்களுக்கு, தமது மாடுகளை வீதியில் அலையவிடவேண்டாம் எனத் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவந்த நிலையில், அவற்றைக் கவனத்தில் கொள்ளமல் சில பண்ணையாளர்கள், மாடுகளை வீதிகளில் அலையவிட்டனர் என, அவர் தெரிவித்தார்.
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆரையம்பதி தொடக்கம் புதுக்குடியிருப்பு வரையான பகுதியிலேயே, இந்த மாடுகள் பிடிக்கப்பட்டனவெனவும் அவர் தெரிவித்தார்.
குறித்த மாடுகளின் உரிமையாளர்கள் அழைக்கப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஒரு மாட்டுக்கு தலா 1,500 ரூபாய் அபராதம் அவர்களிடம் அறவிடப்பட்டதெனவும், தவிசாளர் தெரிவித்தார்.
கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும், அபராதமும் எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும் எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.
3 minute ago
9 minute ago
10 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 minute ago
10 minute ago