2025 மே 07, புதன்கிழமை

கட்டுரை, கவிதைப் போட்டியில் வெற்றியீட்டியவர்கள் விவரம்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 06 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம், கடந்த உலக உளநல தினத்தை முன்னிட்டு 'கௌரவமான உளநல சேவை- அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும்' எனும் தொனிப்பொருளில் நடத்திய கட்டுரை, கவிதைப் போட்டி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கட்டுரைப் போட்டி

1ஆம் இடம்   - திரு எஸ்.எச்.அமீர் - மூதூர், 2ஆம் இடம்   - செல்வி தம்பிமுத்து ரிஷhலினி   - கொம்மாதுறை, செங்கலடி, 3ஆம் இடம்   - திரு சுதாகரன் சிவானுஜன் - திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

கவிதைப் போட்டி

1ஆம் இடம்   - திரு கி.குலசேகரன் - கீழ்க்கரை, அப்புத்தளை, 2ஆம் இடம்   - செல்வி சி.கற்பஹாசினி – கரவகெட்டிய, பலாங்கொடை, 3ஆம் இடம்   - ஆத்மராஜா றூத் சந்திரிக்கா – கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு

அங்கொடை மனநல மைத்தியசாலையின் மனநல வைத்திய நிபுணர் எம்.கணேசன் தலைமையின் கீழ் உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் அனுசரணையுடன் நடத்தப்பட்ட இப்போட்டிகளில் 1ஆம் 2ஆம் 3ஆம் இடங்களைப் பெற்றவர்கள் முறையே 15,000, 10,000, 5,000 பணப்பரிசும் உளவியல் விருதும் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளதாக  மேற்படி கற்கை நிலையத்தின் பணிப்பாளர் திரு ரி.பிரான்சிஸ் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X