2025 மே 21, புதன்கிழமை

கணவனுக்கு கத்திக்குத்து; மனைவியும் வைத்தியசாலையில்

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்ததால் ஒருவர் காயமடைந்துள்ளார் என்பதுடன், இந்தச் சம்பவத்தைப் பார்த்துக்கொண்டு நின்ற கத்திக்குத்துக்கு இலக்கான நபரின் மனைவியும் அதிர்ச்சிக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டி ஓட்டுநரான காத்தான்குடி 5ஐச் சேர்ந்த முஹம்மத் சபீர் (வயது 25) என்பவரே கத்திக்குத்துக்கு இலக்காகி பாரதூரமான காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

மேற்படி சபீர் என்பவரும் அவரது மனைவியும் தனியார் வைத்தியசாலை ஒன்றுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், மேற்படி வீதியில் வசிக்கும் நபரொருவருக்கும் சபீர்க்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது சபீர்க்கு அவருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட நபர் தான் வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார்.

இதனால் மேற்படி சபீர் படுகாயமடைந்துள்ளார்.

மனைவி திடீர் மயக்க முற்று விழுந்த நிலையில், மேற்படி கணவனும் மனைவியும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கணவன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கத்திக்குத்தை மேற்கொண்ட முகம்மட் றாபி என்பவரை காத்தான்குடி பொலிஸார் உடனடியாக கைதுசெய்துள்ளதுடன் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X