2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கண்காணிப்புக் கமெராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி முழுவதுமாக, காத்தான்குடி நகர சபையால், கண்காணிப்புக் கமெராக்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

இதனை எதிர்வரும் ஜனவரி மாதம் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபையால் விசேட செயலணியொன்றை உருவாக்கி, அதன் மூலம் இந்தக் கண்காணிப்புக் கமெராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைக்கப்படவுள்ள இக்குழுதான், இந்த கண்காணிப்புக் கமெராக்களைப் பொருத்தி அதனை கண்காணிப்பார்கள் என்றும் சிங்கப்பூர் நாட்டில் நடைமுறையிலுள்ளமை போன்று இச்செயற்றிட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.

இதற்காக காத்தான்குடி நகர சபையால் உப விதியொன்றைத் தாம் ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்தச் சட்ட உப விதியை வைத்து காத்தான்குடியின் சகல விடயங்களும் அவதானிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், வாகனப் போக்குவரத்துக்களை ஒழுங்குபடுத்துதல், வீதி ஒழுங்குகள் உட்பட சகல விடயங்களும் இதன்மூலம் அவதானிக்கப்படு, காத்தான்குடி நகரத்தை பசுமையான நகரமாக மாற்றும் இலக்கை வைத்தே, இந்த வேலைத்திட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X