Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவும் பெண்கள் அபிவிருத்திப்பிரிவும் இணைந்து நடத்திய பெண்களுக்கான சுவர் அலங்கார கைவினைப் பொருட்கள் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களின் பொருள் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், மாவட் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்ததுடன், அவர்களது கைவினைப் பொருட்களையும் பார்வையிட்டார்.
பப்றிக், எம்போஸ், வர்ணங்கள், மணல், மரத்தூசுகள் எனப் பல முறைகளில் வடிவமைக்கப்பட்டுள்ள இச் சுவர் அலங்கார கைவினைப் பொருட்கள் சுற்றுலாத்துறைகளைக் கவரும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். அந்தவகையில், இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது என மாவட் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
இதன் போது, உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், நிருவாக உத்தியோகத்தர் கே.தயாபரன், மாவட்ட பெண்கள் அபிவிருத்திப் பிரிவின் மாவட்ட இணைப்பாளர் திருமதி. அருணாளினி சந்திரசேகரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சிறுதொழில் அபிவிருத்திப்பிரிவினால் மண்முனை வடக்கு பிரதேசத்தில் நடத்தப்பட்ட தொழில் வழிகாட்டல் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களில் தெரிவு செய்யப்பட்ட 07 பேருக்கே இந்த இலவச சுவர் அலலங்காரப் பொருள்கள் தயாரித்தல் பயிற்சி நெறி நடத்தப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago