Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படம் மற்றும் உற்பத்திப் பொருட்களின்; கண்காட்சி, பிரதேச செயலக வளாகத்தில் புதன்கிழமை (23) நடைபெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடனும் கமிட் மற்றும் ஹன்டிகப் நிறுவனங்களின் அமுலாக்கலுடனும்; மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச வாழ்வகம் அமைப்பினால் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டது.
சமவசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதனுடாக இலகுவில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய மக்களுக்கான நிலைத்து நிற்கக்கூடிய வாழ்வாதார மற்றும் பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய வறுமைக் குறைப்பு எனும் செயற்பாட்டிற்கமைவாக இவ்வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
இந்நிகழ்வில் மண்முனை மேற்கு வுவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மலராஜ், மாவட்ட சமூக சேவை உத்தியோகஸ்தர் எஸ்.அருள்மொழி, கமிட் நிறுவன திட்டப் பணிப்பாளர் கே.காண்டீபன், ஹென்டிகப் நிறுவன திட்ட முகாமையாளர் ஜி.கிறிஸ்டி, வாழ்வின் எழுச்சி முகாமையாளர் எம்.மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் விசேட தேவையுள்ள பயனாளிகளும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago