2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கண்காட்சி

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் 65ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் 'புலம்பெயர்வு' எனும் தொனிப்பொருளிலான கண்காட்சி, எதிர்வரும் 8ஆம் திகதி முற்பகல் 10 மணி முதல் மாலை 4 மணிவரை மட்டக்களப்பு புனித அந்தோனியார் வீதியை அண்டி அமைந்துள்ள மேற்படி அமைப்பின் மட்டக்களப்புக் காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.  

இக்கண்காட்சியின்போது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்பவர்களின் தற்போதைய நிலைமை, பாதுகாப்பான புலம்பெயர்வு, புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் செயற்பாடுகள், புலம்பெயர்ந்தவர்களின்  அனுபவங்கள் சம்பந்தமான புகைப்படங்கள், ஓவியங்கள், புலம்பெயர்வு சம்பந்தமான குறும்படங்கள், வீடியோக்கட்சிகள் என்பன காட்சிப்படுத்தப்படவுள்ளன.

பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பான விழிப்புணர்வையும் அறிவையும் ஏற்படுத்தும் வகையில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியைப் பார்வையிடுவதற்கான அனுமதி இலவசமெனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X