2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கண்ணி வெடியகற்றல் பிரிவுகளுக்கு அமெரிக்கா நிதியுதவி

Niroshini   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
தேசிய கண்ணி வெடி அகற்றல் குழுவுக்கு சர்வதேச மற்றும் உள்ளக பங்காளர்களின் நிலக்கண்ணி வெடியகற்றல் நடவடிக்கைகளுக்காக 1.745 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவியை வழங்குவதாக அமெரிக்கத் தூதுவர் அதுல் கைசப் அறிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
 
1993ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணி வெடியகற்றல் உதவிக்காக அமெரிக்கா 43 மில்லியன் அமெரிக்க டொலர்களை  வழங்கியுள்ளது.
 
இந்த உதவித் திட்டம் பாதுகாப்பு மற்றும் கள உபகரணங்கள் நன்கொடை, கண்ணி வெடிகளைக் கண்டறிதல்,நிலத்தை மீள வழங்கல் தொடர்பான ஆய்வுகள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து கண்ணி வெடியகற்றல் செயற்பாடு என்பவற்றை உள்ளடக்கியதாகும்.

இலங்கை இராணுவத்தில் உள்ள கண்ணி வெடியகற்றல் பிரிவுகளுக்கு பயிற்சிகளை வழங்குவதன் ஊடாக இலங்கையின் கண்ணி வெடியகற்றல் ஆற்றலை மேம்படுத்த முடியும்.

2020ஆம் ஆண்டளவில் கண்ணி வெடி அற்ற நாடாக இலங்கையை மாற்றும் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனின் உறுதிக்கு நான் ஆதரவளிக்கின்றேன்.

இலங்கையில்  எஞ்சியுள்ள கண்ணி வெடி நிறைந்த பகுதிகளை பாதுகாப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் பணியாற்றும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X