Editorial / 2019 ஜூலை 17 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் காண்ஸ்டபிள் கருங்குளவித் தாக்குதலுக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று வாகரைப் பொலிஸ் வளாகத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் நிலைய வளாகத்தை குறித்த பொலிஸ் காண்ஸ்டபிள் துப்புரவு செய்து கொண்டிருந்தபோது, எங்கிருந்தோ வந்த கருங்குளவிகள் பொலிஸ் காண்ஸ்டபிளின் தலையிலும் மார்பிலும் கொட்டியவுடன் மயக்கமடைந்த அவர் அருகிலுள்ள வாகரை மாவட்ட வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டார். கருங்குளவித் தாக்குதலுக்குள்ளாகி சுமார் 45 நிமிட நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் தலையில் 4 இடங்களிலும் மார்பிலும் கருங்குளவிகள் கொட்டியிருந்ததாக பிரதேச மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன் தெரிவித்தார்.
சீனன்குடா, கெமுனுபுர, ஐந்தாம் கட்டைபிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்திரதாஸ வணிஹசிங்ஹ (வயது 54) என்ற பொலிஸ் காண்ஸ்டபிளே உயிரிழந்துள்ளார். சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலையில் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
18 minute ago
23 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
23 minute ago
48 minute ago