2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கர்பலாக் கிராமத்தில் 178 பேரின் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு

Suganthini Ratnam   / 2017 மார்ச் 07 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மண்முனைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலாக் கிராமத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை தனி நபர் ஒருவர் சுவீகரித்துள்ளதாகக் கூறி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட 178 பேர் இதுவரையில் முறைப்பாடு செய்துள்ளதாகப் பொலிஸார்; தெரிவித்தனர்.

மேற்படி கிராமத்தில் 312 பேருக்குச் சொந்தமான 13 ஏக்கர் காணிகளை  மேற்படி நபர் சுவீகரித்துள்ளார்.  தங்களின்; காணிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் மற்றும் காணி வரலாற்றுப் பற்றுச்சீட்டு ஆகியவை தம்மிடம் உள்ளன.  தங்களின் காணிகளை மேற்படி நபர் சுவீகரித்தது மாத்திரமன்றி, அவற்றுக்குப் போலியான உறுதிகளை எழுதியுள்ளதாகவும் முறைப்பாட்டில்  இவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கடந்த ஒரு வாரமாகவிருந்து முறைப்பாடுகள்; கிடைத்து வரும் நிலையில், விசாரணை  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.
மேலும், மண்முனைப்பற்றுப் பிரதேச சபைச் செயலாளர் என்.கிருஸ்ணப்பிள்ளையை இக்காணிகளின் சொந்தக்காரர்கள்   திங்கட்கிழமை (6) மாலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இது தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்பட்டு, உரியவர்களின் காணிகளென்று உறுதிப்படுத்தப்பட்டால், உரியவர்களிடம் காணிகள் ஒப்படைக்கப்படுமென அப்பிரதேச செயலாளர் கூறியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X