Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 நவம்பர் 09 , பி.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலப்பு முறைத் தேர்தல் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்குச் சாவுமணியாகுமென, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமத் தெரிவித்தார்.
ஏறாவூர் பிரதேசத்திலுள்ள சுமார் 50,00 மாணவர்களுக்கு, பாடசாலைப் புத்தகப்பை, எழுது கருவிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கும் நிகழ்வின் 3ஆம் கட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அல் அஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர்,
“விகிதாசாரத் தேர்தல் முறையை இல்லாமலாக்கி விட்டு, தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள கலப்பு முறையின் மூலமான எதிர்காலத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் இந்த நாட்டின் முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் பறிக்கப்டிருப்பதை பிரதிபலிப்பதாக அமையும் என்று நான் இப்பொழுது கூறும் ஊகம் எதிர்காலத்தில் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்பை உணர்த்தி நிற்கிறது.
“துரதிர்ஷ்டவசமான இந்த மசோதா, நாடாளுமன்றத்திலே அங்கிகரிக்கப்படுவதற்கு கை உயர்த்திய அத்தனை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமூகத் துரோகிகளாகக் கருதப்படுவார்கள்.
“கலப்பு முறைத் தேர்தல் மசோதா, இந்த நாட்டினது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைத்திருக்கின்றது.
“புதிய கலப்பு முறைத் தேர்தல் மூலம் தெரிவாகப் போகும் முஸ்லிம் சிறுபான்மையினரின் பரிதிநிதித்துவங்கள், நாடாளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும், உள்ளுராட்சி மன்றங்களிலும் கணிசமாகக் குறையும் வாய்ப்பு உள்ளது.
“21 பேராக இருந்த முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கலப்பு முறைத் தேர்தல் உத்தி மூலமாக அதிகப்படியாக 9 ஆகஆகக் குறையப் போகும் அதேவேளை, கிழக்கு மாகாண சபையிலே தற்போது வரை 14ஆக இருக்கும் மாகாண சபை முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 9ஆகக் குறைந்து விடும் என்ற கணிப்பை நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
“இதுபற்றிப் பகிரங்கமாக விவாதிக்க நான் தயாராக இருக்கின்ற அதேவேளை, எதிர்காலத்தில் முஸ்லிம் சமூக அரசியல் உரிமைகள் பறிபோகாத வண்ணம் நாம் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும். அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்ய நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
3 hours ago
5 hours ago