Editorial / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், மீன் வியாபாரிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல், மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதன்போது, வெளி மாவட்டத்தக்கு மீன் கொண்டு செல்லும் நபர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அனுமதி பெறப்பட்டு, பின்னர் திரும்பும் பட்சத்தில் 14 நாள்கள் சுய தனிமைப்படுத்தில் இருக்க வேண்டும் என்பதோடு, வேறு மாவட்டத்தினர் யாரையும் வாகனத்தில் ஏற்றி வரக் கூடாதெனத் தீர்மானிக்கப்பட்டது.
வெளி மாவட்டங்களில் இருந்து மீன் கொள்வனவிற்கு வரும் வாகனங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பிரதேசத்தைக் காப்பாற்றும் நோக்கில் மீனவர்களின் ஒத்துழைப்புடன் ஆழ்கடலுக்குச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிறு படகுகள் மூலம் கொண்டு வரப்படும் மீன்கள், மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் மாத்திரம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படுவதாக, தீர்மானிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ருக்சான் குரூஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.எஸ்.எஸ்.எம்.வசீம், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.எம்.நஜீப்கான், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறைத் தவிசாளர் ரி.ஹரிபிரதாப், வாழைச்சேனை பொலிஸார், பொதுச் சுகாதார மேற்பார்வை பரிசோதகர்கள், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக முகாமையாளர், மீனவர் சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago