2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கல்முனை மாநகர சபையின் அமர்வு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபையின் முதலாவது மாதாந்த சபை அமர்வு, நாளை(26) காலை 10 மணி தொடக்கம் மாநகர மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில், மாநகர சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த அமர்வில் மாநகர சபை உறுப்பினர்களின் முதலுரைகள் இடம்பெறவிருப்பதுடன், சபைக்கான பத்து நிலையியற் குழுக்களும் தெரிவுசெய்யப்படவுள்ளன.
நிதி நிலையியற் குழு, சுகாதார மற்றும் திண்மக்கழிவகற்றல் குழு, வாகனப் பராமரிப்புக் குழு, அபிவிருத்தித் திட்டமிடல் குழு, சந்தைகள் மற்றும் கடைத்தொகுதி அபிவிருத்திக் குழு, பொது வசதிகள் மற்றும் நலன்புரிக் குழு, விளையாட்டு அபிவிருத்திக் குழு, வீதி விளக்கு பராமரிப்புக் குழு, கல்வி - கலாசார அபிவிருத்திக் குழு, அனர்த்த முகாமைத்துவக் குழு என்பனவே இவ்வாறு தெரிவுசெய்யப்படவுள்ளன.
அத்துடன், காசோலைகளிலும் கட்டளைகளிலும் கையொப்பமிடுவதற்குத் தெரிவான உத்தியோகத்தர்களுக்கு அதிகாரமளிக்கும் தீர்மானத்தை அங்கிகரித்தல் உள்ளிட்ட விடயங்களும், நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X