2025 மே 21, புதன்கிழமை

கல்லடி பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2017 நவம்பர் 10 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்  

மட்டக்களப்பு கல்லடி,உப்போடை சிவானந்த விளையாட்டு மைதானத்துக்கு அருகில் இன்று காலை (10) ஒன்றுகூடிய மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

கல்லடி பாலம் தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையான பகுதியை நகரசபையின் கீழ் கொண்டுவரக்  கோரியும்,  குறித்த பகுதிகளில் உள்ள சில இடங்களை காத்தான்குடி நகரசபையுடன் இணைப்பதை நிறுத்துமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொது அமைப்புகள் இணைந்து  ஏற்பாடு செய்திருந்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பல்வேறு வாசகங்களை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X