2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

கல்லடி பாலத்திலிருந்து விழுந்த மாணவன் மாயம்

Yuganthini   / 2017 ஜூன் 07 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான், கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன், வ.துசாந்தன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, கல்லடி பாலத்திலிருந்து, இன்றுக்(07) காலை, ஆற்றில் விழுந்த மாணவனொருவரைத் தேடும் பணிகளில், பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

கல்லடியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில், உயர்தரம் கணித பிரிவில் கற்றுவரும் அம்பிளாந்துறை, நாகமுனையைச் சேர்ந்த 17 வயதுடைய க.பவனுஷன் என்னும் மாணவனே, இவ்வாறு பாலத்திலிருந்து விழுந்துள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிலிருந்து பாடசாலைக்குப் புறப்பட்டுச் சென்ற மேற்படி மாணவனின் புத்தகப்பையும் சைக்கிளும், கல்லடி பாலத்தில் நிற்பதைக் கண்டே, அம்மாணவன் பாலத்திலிருந்து விழுந்திருப்பான் என்ற சந்தேகம் நிலவுவதாகவும், அவனைத் தேடிக் கண்டறியும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில், காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .