Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 02 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
இப்பிரதேசத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்கள் கல்வி கற்பதற்கு எதுவிதத் தடைகள் வந்தாலும், அவற்றைத் தீர்த்து வைப்பதற்கு தான் முன்வருவேன் என, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார்.
படுவாங்கரைப் பகுதியில் புதுவருட தினத்தில் (01) பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துக் கருத்துத் தெரிவிக்கையிலே, அவர் இவ்வாறு கூறினார்.
மாணவர்கள் எதுவிதத் தடைகள் வந்தாலும் எக்காரணம் கொண்டும் கல்வியை இடை நடுவில் விட்டு விடக்கூடாது என வலியுறுத்திய அவர், ஏழை மாணவர்களின் கற்றலுக்கு உதவுவதற்குப் பலர் உள்ளார்கள் என்றும் அவ்வாறானவர்களை இனம்கண்டு, மாணவர்களின் கற்றலுக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க பதவி நிலை உத்தியோகங்களுக்கும், சிறந்த அரசியல் முன்னெடுப்பக்களுக்கும் கல்வியை சிறந்த முறையில் கற்றுக் கொண்டால்தான் அது சாத்தியமாகுமெனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
57 minute ago
1 hours ago