Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
புதிய ஆசிரியர் நியமனத்தில் 48 ஆசிரியர்கள் மட்டக்களப்பு, கல்குடாக் கல்வி வலயத்துக்கு மேலும் வேண்டுமென்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஷாமிடம் கேட்டுள்ளதாக அவ்வலயப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்தார்.
எதிர்வரும் ஏப்ரல் மாத்துக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள ஆசிரியர் நியமனத்தில் 42 ஆசிரியர்கள் இந்த வலயத்துக்கு கிடைப்பார்களெனவும் அவர் கூறினார்.
மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு, கல்குடாக் கல்வி வலயத்தில் புதன்கிழமை (10) பிற்பகல் நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு கூறினார்.
பின்தங்கிய வலயமாகக் காணப்பட்ட கல்குடாக் கல்வி வலயம் வளர்ந்துகொண்டிருக்கின்றமை தொடர்பில் மாகாண மற்றும் மத்திய கல்வி அமைச்சில் நடைபெறும் கூட்டங்களில் பேசப்படுகின்றது. 2010ஆம் ஆண்டு இந்த வலயத்தில் 917 ஆசிரியர்கள் காணப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2014ஆம் ஆண்டு 1,317 ஆக அதிகரித்ததாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
3 hours ago
4 hours ago