2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கல்லடியிலுள்ள தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் முன்பாக பதற்றம்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான மருத்துவச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காக  மட்டக்களப்பு, கல்லடிப் பகுதியிலுள்ள தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் முன்பாக ஒன்றுகூடியவர்கள் முண்டியடித்த நிலையில் இன்று காலை அங்கு பதற்ற நிலைமை காணப்பட்டது.

இருப்பினும், பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன், சேவையை  தங்குதடையின்றி இடம்பெறச் செய்தனர்.

குறித்த நிறுவனத்துக்கு முன்பாக சுமார் 500 பேர் ஒன்றுகூடியிருந்தனர்.  

சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனங்களைச் செலுத்துவோருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் அறவீடு செய்யப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக பலர் முன்வந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கென தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் ஒரேயொரு கிளை உள்ளதன் காரணமாக நாளொன்றுக்கு 100 பேருக்கு மாத்திரமே  மருத்துவச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

எனினும், கடந்த சில தினங்களாக சாரதி அனுமதிப்பத்திரங்களைப்; பெறுவதற்காக மருத்துவச்  சான்றிதழ்களைப் பெற வருவோரின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதன் காரணமாக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவன அதிகாரிகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X