2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கல்வி உட்கட்டமைப்பை மேம்படுத்த நிதியுதவி

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

கிழக்கு மாகாணத்தில் கல்வி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 3.3 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் சம்பூரிலுள்ள பாடசாலைகளுக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலரையும் அமெரிக்கா வழங்கியிருந்ததாக அமெரிக்கத் தூதரகம் இன்று வெள்ளிக்கிழமை (23) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில்,  'அமெரிக்கத் தூதகரம் மற்றும் பொறியியலாளர்களின் அமெரிக்க இராணுவக்குழுவும் அண்மையில் தெற்கு மற்றும் கிழக்கில் அனர்த்தத்துக்கு  உள்ளாகக்கூடிய பகுதிகளிலுள்ள பாடசாலைகள் மற்றும் மருத்துவ மையங்களுக்கு விஜயம்செய்து, உதவியளிப்பதற்கு சாத்தியமான உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து கண்டறிந்தனர்.

கிழக்கு மாகாணத்தின் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளையும் ஹம்பாந்தோட்டையின் பாடசாலைகள் மற்றும் மருத்துவ மையங்களையும் இந்த குழுவினர் பார்வையிட்டனர். தெற்குக்கான  விஜயத்தின்போது இந்தக் குழுவானது வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து கலந்துரையாடினர்.
இலங்கையின் நெருக்கமான பங்காளர் என்ற வகையில், மக்கள் அனைவரும் விசேடமாக இயற்கை அனர்த்தங்கள் அல்லது மோதல்களினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் மற்றும் மருத்துவ மையங்களுக்குhன அணுகும் வசதி உள்ளமையை உறுதி செய்வதற்கு நாடெங்கிலும் அமெரிக்கத் தூதரகம் பணியாற்றி வருகின்றது.

2011ஆம் ஆண்டு முதல் இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் பாடசாலைகள் மற்றும் மருத்துவ மையங்களில் 12.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபாயில் 1.78 பில்லியன்) பெறுமதியான நிர்மாணங்களை அமெரிக்கா பூர்த்தி செய்துள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X