2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

களஞ்சியசாலை உரிமையாளருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 24 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

பழுதடைந்த உணவுப் பொருட்களை மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு விநியோகிக்கவிருந்த களஞ்சியசாலை உரிமையாளர் ஒருவருக்கு 6,000 ரூபாயை அபராதமாக  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா, புதன்கிழமை (23) மாலை விதித்தார்.  

அத்துடன், பழுதடைந்த உணவுப் பொருட்களை  அழிக்குமாறும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

உணவுக்காக மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு விநியோகிக்கப்பட்ட 35 அரிசி மூடைகள் பழுதடைந்து காணப்படுவதாக மட்டக்களப்பு பொதுச் சுகாதார  வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, சிறைச்சாலைக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் களஞ்சியசாலையில்  பொதுச் சுகாதார அதிகாரிகள் சோதனை செய்தபோது,  அக்களஞ்சியசாலையில்  பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் இருந்தமை தெரியவந்தது.

340 மூடைகளில் இருந்த 17,000 கிலோகிராம் அரிசி, 20 கிலோகிராம் கோவா, 20 கிலோகிராம் கத்தரிக்காய், 80 கிலோகிராம் பீட்ருட், 40 கிலோகிராம் செத்தல் மிளகாய், 26  கிலோகிராம் கொத்தமல்லி,  25 கிலோகிராம் பருப்பு, 200 கிலோ மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பழுதடைந்த நிலையில் களஞ்சியசாலையிலிருந்து கைப்பற்றப்பட்டதாக புளியந்தீவுப் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.

பழுதடைந்த உணவுப் பொருட்களை திருப்பெருந்துறைப் பிரதேசத்திலுள்ள குப்பை கொட்டும் இடத்துக்குக்  கொண்டுசெல்லப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X