2025 மே 20, செவ்வாய்க்கிழமை

காட்டுக்குள் கசிப்பு நிலையம்: ஒருவ​ர் கைது; ஒருவர் தப்பியோட்டம்

வா.கிருஸ்ணா   / 2017 நவம்பர் 14 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வந்த இடம், இன்று (14) அதிகாலை வவுணதீவு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பாவற்கொடிச்சேனை, வாகக்கல்மடு காட்டுப் பகுதியில் இந்தக் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினரே, இந்த முற்றுகையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, சுமார் 400 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டதுடன், அங்கிருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் ஒருவர் தப்பியோடியுள்ளாரெனவும், அவரைக் கைதுசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபாவனையைக் குறைக்கும் ஜனாதிபதியின் செயற்றிட்டத்துக்கு அமைவாக வவுணதீவு பொலிஸார் தொடர்ச்சியான தேடுதல் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X