2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

காட்டு யானைகளால் தென்னந்தோப்பு துவம்சம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஏப்ரல் 09 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமத்துக்குள், நேற்று (08) இரவு காட்டுயானைகள் ஊடுருவி, அங்கிருந்த தென்னந்தோட்டத்துக்கு அழிவை ஏற்படுத்தியுள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.

தொன்னந்தோட்டத்தில் இருந்த சுமார் 36 தென்னை மரங்களை இவ்வாறு யாயைகள் அழித்துள்ளதாக,  அத்தோப்பின் உரிமையாளர் ஆனந்தி ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாகவும் கடந்த வருடம் தனது தோட்டத்திலிருந்த 20 தென்னை மரங்கள், காட்டு யானைகளால் அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, நெடியமடு, உன்னிச்சை, ஆயித்தியமலை போன்ற பிரதேசங்களில் யானை தடுப்பு மின்சார வேலி இருந்தபோதிலும் கடந்த பல மாதங்களாக அதற்கு மின்சரம் வழங்கப்படாமல் உள்ளதாகவும், தமது விவசாய உற்பத்திகளையும் நெல் வயல்களையும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலே இரவு பகலாக கண்விழித்திருந்து பாதுகாத்து வருவதாகவும் கூறி இங்குள்ள விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X