R.Tharaniya / 2025 மார்ச் 04 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட - சின்னபுல்லுமலை பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை (04) அதிகாலை நுழைந்த காட்டு யானை ; இரண்டு வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
இதில் ஒரு வீட்டை முற்றாக உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன் ; வீட்டின் சுவர், கதவு ,ஜன்னல் வீட்டினுள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளையும் நாசம் செய்ததுடன் வீட்டில் இருந்த உபகரணங்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் இருந்தவர்களும் அதன் போது அச்சத்தின் மத்தியில் கடும் பிரியேத்தனத்தின் மத்தியில் யானையை துரத்தியுள்ளனர்.
இதேவேளை சின்ன புல்லுமலை கிராமத்தில் மற்றொரு வீட்டின் சுவரையும் யானை அடித்து உடைத்துள்ளது.
தாம் கஷ்டப்பட்டு கட்டிய வீடு இவ்வாறு யானை தாக்கியதில் உடைந்துள்ளதாக கவலை தெரிவிகும் சின்னபுல்லுமலை மக்கள் காட்டு யானைத்தொல்லையில் இருந்து தமக்கான நிரந்தர தீர்வை பெற்றுத் தரக் கோருகின்றனர்.
பேரின்பராஜா சபேஷ்



59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago