2025 மே 20, செவ்வாய்க்கிழமை

காணாமலாக்கப்பட்டவர்களின் துல்லியமான விவரங்களைப் பெற முயற்சி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 நவம்பர் 16 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின்போதும் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் துல்லியமான விவரங்களைப் பெற தமது அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாக, மட்டக்களப்பு காணாமலாக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட உறவினர்களின் நினைவுக் குழுவின் செயற்பாட்டாளர்  எஸ். அரியமலர் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று (16) கருத்து வெளியிட்ட அவர், மேலும் கூறியதாவது,

“1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளின் விளைவாக காணாமலாக்கப்பட்டோரின் 27ஆவது வருட நிறைவும் கழிந்து விட்டது.

“ஆயினும், காணாமல் போனவர்களில் தங்கி வாழ்ந்த உறவுகள் இன்னமும் நீதி கிடைக்காது ஏக்கப் பெருமூச்சுடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

“இவர்களுக்கு என்ன ஆனது என்பதும் இதுவரைத் தெரியவராத நிலையில் உறவினர்கள் வருடாந்தம் நினைவு நிகழ்வை மாத்திரம் அனுஷ்டித்து வருகின்றனர்.

“1990ஆம் ஆண்டு செப்ரெம்பெர் 5ஆம் திகதி, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதலின்போது, அங்கு தஞ்சமடைந்திருந்தோரில்  158 ஆண்கள் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் பல காணாமல் போதல்களும் பல படுகொலைகளும் இடம்பெற்றிருக்கின்றன.

“மட்டக்களப்பின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள கிராமங்களிலிருந்தும் யுத்தம் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் துல்லியமான விவரங்கள் இதுவரை ஆவணங்களாகத் திரட்டப்படாத நிலை இருந்து வருகின்றது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X