Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 பெப்ரவரி 15 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் எஸ் எம் நூர்தீன்
மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் புதன்க்கிழமை (14) நடைபெற்றது.
அரச காணிகளில் குடியிருந்து அவற்றை பராமரிக்கின்ற மக்களுக்கு காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மாகாண காணி நிருவாகத் திணைக்களத்தின் அனுமதி பெற்று காணிக்கச்சேரிகளை நடாத்திய பயனாளிகளுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் 3 ஆம் கட்ட நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஸா தியாவட்டவான் கிராம சேவகர் எம். எம்.ஏ.சாதாத், காணி வெளிக்கள போதன ஆசிரியர் சி.எம்.எம்.சமீம் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .